/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சங்க பெயர் பலகை அகற்றம்; வாகன ஓட்டுனர்கள் போலீசில் புகார்
/
சங்க பெயர் பலகை அகற்றம்; வாகன ஓட்டுனர்கள் போலீசில் புகார்
சங்க பெயர் பலகை அகற்றம்; வாகன ஓட்டுனர்கள் போலீசில் புகார்
சங்க பெயர் பலகை அகற்றம்; வாகன ஓட்டுனர்கள் போலீசில் புகார்
ADDED : செப் 19, 2024 09:35 PM

கோத்தகிரி : கோத்தகிரியில் சங்க தகவல் பலகையை அகற்றிய, தி.மு.க., கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அனைத்து வாடகை வாகன ஓட்டுனர்கள்; உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் திரண்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
கோத்தகிரி மார்க்கெட் திடலில், அனைத்து வாடகை வாகனங்கள் நிறுத்தம் உள்ளது. இப்பகுதியில், பேரூராட்சி அனுமதியுடன் செயல்படும் கடைகள் உட்பட, ஆக்கிரமிப்பு கடைகள் அதிகளவில் உள்ளன.
இங்கு, 50க்கும் மேற்பட்ட வாடகை வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. அனைத்து வாடகை வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் தகவல் போர்டு இப்பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதே பகுதியில் பூக்கடை நடத்திவரும் பேரூராட்சி தி.மு.க., கவுன்சிலர் வெஸ்லி என்பவர், தனது கடை விரிவாக்கத்திற்காக, சங்க தகவல் போர்டை, இரவோடு இரவாக அகற்றி பணி மேற்கொண்டுள்ளார்.
இதனால், அதிருப்தி அடைந்த வாடகை வாகன டிரைவர்கள் மற்றும் உரிமை யாளர்கள் ஒருங்கிணைந்து, கடை உரிமையாளரிடம், 'கடையை ஆக்கிரமித்து விரிவாக்கம் செய்வதுடன், சங்க தகவல் போர்டை அகற்ற யார் அதிகாரம் அளித்தது,' என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, ஓட்டுனர் சங்கத்தினர் திரண்டு வந்து போலீசில் புகார் அளித்தனர்.
பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி, துணைத் தலைவர் உமாநாத் உட்பட சக கவுன்சிலர்கள் முன்னிலையில், எஸ்.ஐ.,கள் வனக்குமார் மற்றும் யுவராஜ் ஆகியோர் குறிப்பிட்ட இடத்தை ஆய்வு செய்து, காவல் நிலையத்தில் இருத்தரப்புக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில், தற்போதைய நிலையே தொடர இருத்தரப்பும் ஒப்புக்கொண்டதை அடுத்து, இரு தரப்பினரும் கலைந்து சென்றனர். இப்பிரச்னையால், பரபரப்பு ஏற்பட்டது.