/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சைக்கிள் பாலம் பகுதியில் அபாய மரங்கள் அகற்றம்
/
சைக்கிள் பாலம் பகுதியில் அபாய மரங்கள் அகற்றம்
ADDED : ஆக 28, 2025 10:35 PM

கோத்தகிரி, ; கோத்தகிரி- குன்னுார் சாலையில் அபாய மரங்கள் அகற்றும் பணி நடந்து வருகிறது.
மாவட்டத்தில், சாலையோரம், பொது இடங்களில் உள்ள அபாய மரங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, அரசு துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்த குழு கணக்கெடுப்பு நடத்தி, தேவையான இடங்களில் அகற்றப்பட்டு வருகிறது.
எதிர்வரும் நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால், மரங்கள் அகற்றும் பணி நடந்து வருகிறது. அதில், கோத்தகிரி -குன்னுார் சாலையில், நடுஹட்டி சைக்கிள் பாலம் பகுதியில், வளைவுகளில் அதிக எண்ணிக்கையில், வானுயர்ந்த பைன் மரங்கள் போக்குவரத்துக்கு இடையூறாகவும், மழை நாட்களில் விழும் தருவாயில் இருந்தன.
இந்த மரங்கள், இரண்டு நாட்களாக அகற்றப்பட்டு வருகிறது. அத்துடன் வாகனங்களில் மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. இப்பணிகள் முழுமை பெறும் பட்சத்தில், போக்குவரத்துக்கு இடையூறு இருக்க வாய்ப்பில்லை.