/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காட்டெருமை காலில் சிக்கிய பிளாஸ்டிக் குழாய் அகற்றம்
/
காட்டெருமை காலில் சிக்கிய பிளாஸ்டிக் குழாய் அகற்றம்
காட்டெருமை காலில் சிக்கிய பிளாஸ்டிக் குழாய் அகற்றம்
காட்டெருமை காலில் சிக்கிய பிளாஸ்டிக் குழாய் அகற்றம்
ADDED : ஜன 14, 2025 08:22 PM

குன்னுார்:
குன்னுார் கேத்தி அருகே, காலில் 'பிளாஸ்டிக்' குழாய் சிக்கி காயத்துடன் நடமாடி வந்த காட்டெருமைக்கு மயக்க ஊசி செலுத்தி, குழாயை வனத்துறையினர் அகற்றினர்.
குன்னுார் அருகே கேத்தி ஜார்ஜ் ஹோம்ஸ் கல்லுாரி மற்றும் லைட்லா பள்ளி வளாகத்தில், காட்டெருமை ஒன்றின் முன்காலில் பிளாஸ்டிக் குழாய் சிக்கி, காயத்துடன் நடமாட முடியாமல் தவித்து வந்தது.
தகவலின் பேரில், குந்தா வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து, முதுமலை புலிகள் காப்பக வன கால்நடை மருத்துவர் காட்டெருமைக்கு மயக்க ஊசி செலுத்திய பிறகு, பிளாஸ்டிக் பி.வி.சி., குழாயை வனத்துறையினர் அகற்றினர். தொடர்ந்து, வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.