/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பஸ் ஸ்டாண்டில் புதுப்பிக்கப்பட்ட போலீஸ் கண்காணிப்பு அறை
/
பஸ் ஸ்டாண்டில் புதுப்பிக்கப்பட்ட போலீஸ் கண்காணிப்பு அறை
பஸ் ஸ்டாண்டில் புதுப்பிக்கப்பட்ட போலீஸ் கண்காணிப்பு அறை
பஸ் ஸ்டாண்டில் புதுப்பிக்கப்பட்ட போலீஸ் கண்காணிப்பு அறை
ADDED : அக் 17, 2025 10:54 PM
கூடலுார்: கூடலுார் பஸ் ஸ்டாண்டில், கண்காணிப்பு கேமராக்கள் கூடிய புதுப்பிக்கப்பட்ட போக்குவரத்து கண்காணிப்பு அறையை, நீலகிரி எஸ்.பி., நிஷா திறந்து வைத்து ஆய்வு செய்தார்.
கூடலுார் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், போக்குவரத்து போலீசாரின் கண்காணிப்பு அறை செயல்பட்டு வருகிறது. அறை சேதமடைந்ததை தொடர்ந்து, 4 சி.சி.டி.வி., கேமராக்கள் வசதியுடன் புதிய கண்காணிப்பு அறை அமைக்கப்பட்டது.
இதன் திறப்பு விழா நடந்தது. நீலகிரி எஸ்.பி., நிஷா கண்காணிப்பு அறையை திறந்து வைத்து, சி.சி.டி.வி., கேமராக்கள் செயல்பாடுகளை ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில், கூடலுார் டி.எஸ்.பி., வசந்தகுமார், இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத், போக்குவரத்து போலீசார் பங்கேற்றனர்.