/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வெலிங்டன் பகுதி வீடுகளில் கதவை உடைக்கும் கரடிகள்
/
வெலிங்டன் பகுதி வீடுகளில் கதவை உடைக்கும் கரடிகள்
ADDED : அக் 17, 2025 10:54 PM
குன்னுார்: குன்னுார் வெலிங்டன் பள்ளி அருகே வந்த கரடி வீட்டின் கதவை உடைத்து சென்றது.
குன்னுார் வெலிங்டன் போலீஸ் ஸ்டேஷன் அருகே கன்டோன்மென்ட் பள்ளி வழியாக நேற்று அதிகாலை கரடி வந்தது. இங்கு பல நாட்கள் பூட்டி இருந்த, வனிதா என்பவரின் வீட்டின் கதவை உடைத்து, அங்கிருந்த எண்ணெய் முழுவதும் உட்கொண்டு சென்றது. இதனால், அருகில் உள்ள குடியிருப்புவாசிகள் அச்சமடைந்துள்ளனர்.
தகவலின் பேரில், வனச்சரகர் ரவீந்திரநாத் மேற்பார்வையில் வனத்துறையினர் ஆய்வுமேற்கொண்டனர். தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதாக தெரிவித்தனர். இதே போல, ஜெகதளா பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள குட்டி கிருஷ்ணன் என்பவரின் பெட்டி கடையை கரடி உடைத்து சேதப்படுத்தியது.