/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சேதமடைந்த தொரப்பள்ளி சாலை சீரமைப்பு பணிக்கு ரூ.5.23 கோடி ஒதுக்கீடு
/
சேதமடைந்த தொரப்பள்ளி சாலை சீரமைப்பு பணிக்கு ரூ.5.23 கோடி ஒதுக்கீடு
சேதமடைந்த தொரப்பள்ளி சாலை சீரமைப்பு பணிக்கு ரூ.5.23 கோடி ஒதுக்கீடு
சேதமடைந்த தொரப்பள்ளி சாலை சீரமைப்பு பணிக்கு ரூ.5.23 கோடி ஒதுக்கீடு
ADDED : அக் 17, 2025 10:54 PM

கூடலுார்: ஊட்டி தேசிய நெடுஞ்சாலை, ஊசிமலை -தொரப்பள்ளி இடையே சேதமடைந்த சாலையை சீரமைக்க, 5.23 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு, கேரளா, கர்நாடகா மற்றும் வட மாநில சுற்றுலா பயணிகள், கூடலுார் வழியாக அதிகளவில் வந்து செல்கின்றனர். இச்சாலையில், ஊசிமலை -தொரப்பள்ளி - இடையே உள்ள, 16 கி.மீ., சாலை பல இடங்களில் சேதமடைந்துள்ளது.
இதனால், வாகனங்களை இயக்க ஓட்டுனர்கள், சுற்றுலா பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது சேதமடைந்த பகுதிகளில் 'பேட்ச் ஒர்க்' மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை, 5.23 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.
அதிகாரிகள் கூறுகையில், சேதமடைந்த சாலையில், தீபாவளிக்கு பின் பேட்ச் ஒர்க் மேற்கொள்வதற்காக, நடவடிக்கை எடுத்து வருகிறோம். 2027ல் இச்சாலை, முழுமையாக சீரமைக்கப்படும்,' என்றனர்.
ஓட்டுனர்கள் கூறுகையில், 'தற்போது, ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம், 2027ம் ஆண்டு வரை சேதமடையாத வகையில், தரமான பணிகளை மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.