/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
புதுப்பொலிவு பெறும் ரயில்வே ஸ்டேஷன்
/
புதுப்பொலிவு பெறும் ரயில்வே ஸ்டேஷன்
ADDED : பிப் 07, 2024 11:19 PM

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷன் கட்டி, 150 ஆண்டுகள் ஆன நிலையில், ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினமும், பல்சக்கர நீராவி மலை ரயில் இயக்கப்படுகிறது.
இதில் உலக நாடுகளில் இருந்தும், இந்தியாவில் இருந்தும், ஏராளமான சுற்றுலா பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இந்த ரயிலை யுனெஸ்கோ அமைப்பு பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது.
இந்த ரயில்வே ஸ்டேஷன், பழமை மாறாமல், புதிதாக மேம்படுத்துவதற்காக, அம்ரித் பாரத் திட்டத்தில், மத்திய அரசு, 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனில் உள்கட்டமைப்பு வசதிகளான, கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பிளாட்பாரத்தில் நிற்கும் பயணிகள், மழையில் நனையாமலும், வெயிலால் பாதிக்காமல் இருக்க, நிழல் கூடங்கள் அமைக்கும் பணிகளும், காம்பவுண்ட் சுவர், ஸ்டேஷனின் நுழைவாயில் வளைவு ஆகியவை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. பயணிகள் சிரமம் இல்லாமல், பிளாட் பாரங்களுக்கு செல்வதற்கு லிப்டும், இரண்டு எஸ்க்லேட்டர்கள் அமைக்கப்பட உள்ளன.
மேலும் ஸ்டேஷனின் கட்டங்கள் பழமை மாறாத நிலையில், நவீன முறையில் உள்கட்டமைப்பு வசதிகள் செய்யும் பணிகள், தீவிரமாக நடைபெறுகின்றன.

