/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தாவரவியல் பூங்கா சாலையில் சீரமைப்பு பணி துவக்கம்; சீரமைப்பு துவங்கியதால் நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு

ADDED : ஜூலை 31, 2025 09:26 PM

ஊட்டி; ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில் மழைகாலத்தில் தேங்கும் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கும் வகையில், சீரமைப்பு பணி துவங்கியது.
ஊட்டி தாவரவியல் பூங்கா சாலை நகரின் பிரதான சாலையாக உள்ளது. இங்கு பொதுப்பணித்துறை அலுவலகம் முதல், பழங் குடியினர் பண்பாட்டு மையம் வரை, மழைகாலத்தில் குளம்போல் வெள்ளம் தேங்கி, பல ஆண்டுகளாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதனால், உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல், சுற்றுலா பயணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டு வந்தனர். வாகனங்கள் செல்ல முடியாத சூழலும் ஏற்பட்டது.
இந்நிலையில், நகராட்சி நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதியில் இரண்டு இடங்களில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது பொக்லையின் உதவியுடன் அங்கு சீரமைப்பு பணிகள் துவக்கப்பட்டுள்ளது. இதனால், பல ஆண்டு பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
நகராட்சி கமிஷனர் தினேஷ் கூறுகையில், ''தாவரவியல் பூங்கா சாலையில் பாதாள சாக்கடை அடைப்பு நீண்ட கால பிரச்னையாக இருந்து வருகிறது.
அப்பகுதியில் எங்கெல்லாம் அடைப்புகள் உள்ளது என்பதை கண்டறிந்து பொக்லைன் உதவியுடன் சகதிகள் அகற்றப்பட்டு வருகிறது,'' என்றார்.