/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோத்தகிரியில் வாடகை தகராறு; ஒருவருக்கு கழுத்து அறுப்பு
/
கோத்தகிரியில் வாடகை தகராறு; ஒருவருக்கு கழுத்து அறுப்பு
கோத்தகிரியில் வாடகை தகராறு; ஒருவருக்கு கழுத்து அறுப்பு
கோத்தகிரியில் வாடகை தகராறு; ஒருவருக்கு கழுத்து அறுப்பு
ADDED : அக் 17, 2024 10:05 PM
கோத்தகிரி : கோத்தகிரியில் வாடகை பிரச்னை சம்பந்தமாக, ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கோத்தகிரி சேட்லைன் பகுதியில், சிலர் வாடகை வீட்டில் தங்கி, கட்டட வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், வீட்டின் உரிமையாளருக்கு வாடகை கொடுப்பதில், இருவருக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில் நிவாஸ் என்பவர், அவருடன் இருந்த கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஸ்டான்லி என்பவரை, கத்தியால் கழுத்தை அறுத்துள்ளார். காயம் அடைந்த ஸ்டான்லி, கோத்தகிரி அரசு மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டார்.
முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின், மேல் சிகிச்சைக்காக, ஊட்டி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார். கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.