/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சேதமடைந்த அரசு பள்ளி சுற்றுச்சுவர் சீரமைத்தால் மாணவர்களுக்கு பயன்
/
சேதமடைந்த அரசு பள்ளி சுற்றுச்சுவர் சீரமைத்தால் மாணவர்களுக்கு பயன்
சேதமடைந்த அரசு பள்ளி சுற்றுச்சுவர் சீரமைத்தால் மாணவர்களுக்கு பயன்
சேதமடைந்த அரசு பள்ளி சுற்றுச்சுவர் சீரமைத்தால் மாணவர்களுக்கு பயன்
ADDED : மார் 21, 2025 02:54 AM

கூடலுார்: புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, சேதமடைந்துள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் சுற்றுச்சுவரை சீரமைக்க வலியுறுத்தி உள்ளனர்.
கூடலுார் புதிய பஸ் ஸ்டாண்ட் ஒட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில், இரவு மற்றும் விடுமுறை நாட்களில் வெளி நபர்கள், கால்நடைகள் உள்ளே நுழைவதை தடுக்க சுற்றுச்சுவர் அமைத்து, நுழைவு வாயில் கேட் அமைத்துள்ளனர்.
இந்நிலையில், ஆண்டுகளுக்கு முன் சுற்று சுவரின் ஒரு பகுதி சேதமடைந்தது. அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், அவ்வழியாக கால்நடைகள் பள்ளி வளாகத்திற்கு செல்வதுடன், இரவு நேரங்களில் சிலர் பள்ளி வளாகத்தில் நுழைந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்க்க, சேதமடைந்த சுற்றுச்சுவரை சீரமைக்க வலியுறுத்தி உள்ளனர்.
பெற்றோர்கள் கூறுகையில், 'இப்பள்ளி, நகரப்பகுதியில், புதிய பஸ் ஸ்டாண்ட் ஒட்டி அமைந்துள்ளது. பள்ளியை சுற்றி அமைக்கப்பட்டுள்ள சுற்றுச் சுவரின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. இதனை சீரமைக்க நடவடிக்கை இல்லாததால், இரவு நேரங்களில் அவ்வழியாக பள்ளி வளாகத்தில் நுழைந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடும் சூழல் உள்ளது.
இதனை தடுக்க, சேதமடைந்த சுற்றுச்சுவரை உடனடியாக சீரமைக்க வேண்டும்,' என்றனர்.