ADDED : செப் 09, 2026 06:52 PM
அ நிறம் | அளவு
பந்தலுார்: பந்தலுார் அருகே ஏலியாஸ் கடை சந்திப்பு பகுதியில் இருந்து, தமிழக எல்லை பகுதியான நம்பியார்குன்னு மற்றும் அய்யன்கொல்லி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலை அமைந்துள்ளது.
சாலையில் ஏலியாஸ் கடை முதல், அய்யன்கொல்லி வரையிலான சாலைப்பகுதி மிகவும் குறுகலாக உள்ளதுடன், குறுகலான வளைவுகள் மற்றும் புதர் செடிகள் நிறைந்து காணப்படுகிறது.
இதனால், கனரக வாகனங்கள் மற்றும் பஸ்கள் சென்று வரும்போது, சிரமம் ஏற்படுவதுடன், எதிரே ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் வேகமாக வரும் போது வழி விட முடியாமலும் சிரமப்படுகின்றனர்.
இந்த சாலையில், கூடலுார், கோவை, திருப்பூர், பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு, தமிழக மற்றும் கேரளா பஸ்கள் சென்றுவரும் நிலையில், சாலையை அகலப்படுத்தி, சீரமைத்தால் போக்குவரத்து நெரிசல் குறையும்.
