ADDED : செப் 09, 2026 06:52 PM
கூடலுார்: கூடலுார் குணில் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டு சேதமடைந்த தடுப்பணையை சீரமைக்க வேண்டும்.
கூடலுார் தொரப்பள்ளி குணில் பகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. இவ்வழியாக செல்லும் ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைத்து, நீரை சேமித்து, கோடைகாலத்தில் விவசாய பாசனத்திற்கு பயன்படுத்தி வந்தனர்.
தற்போது, தடுப்பணை பல இடங்களில் சேதமடைந்து, தண்ணீர் தேங்காமல் வழிந்தோடுகிறது. ஆற்று நீரை விவசாய பாசனத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில் பாதிப் ஏற்பட்டு வருகிறது.
விவசாயிகள் கூறுகையில், ‘கோடைகாலத்தில், இந்த தடுப்பணை நீர் பாசனத்திற்கு பயனுள்ளதாக இருந்து வருகிறது. தடுப்பணை சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே, சேதமடைந்த தடுப்பணையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும,’ என்றனர்.
