/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
400 பயனாளிகளுக்கு ரெப்கோ வங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கல்
/
400 பயனாளிகளுக்கு ரெப்கோ வங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கல்
400 பயனாளிகளுக்கு ரெப்கோ வங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கல்
400 பயனாளிகளுக்கு ரெப்கோ வங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கல்
ADDED : செப் 02, 2025 08:16 PM
கோத்தகிரி; கோத்தகிரியில் ரெப்கோ வங்கி சார்பில், 400 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
ரெப்கோ ஹோம் பைனான்ஸ் தலைவர் தங்கராஜ், ரெப்கோ வங்கி தலைவர் சந்தானம் ஆகியோர் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி, கல்லுாரி பயிலும், 33 மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை, தாயகம் திரும்பியோர் விதவை மகளிருக்கு இலவச தையல் இயந்திரங்கள், தாயகம் திரும்பியோர் (அ) வகுப்பு உறுப்பினர் விவசாயிகளுக்கு தேயிலை பறிக்கும் இயந்திரம் மானிய விலையில் வழங்கப்பட்டது.
தவிர, (அ) வகுப்பு உறுப்பினர்களின் மருத்துவ செலவுக்கான உதவிகள், உறுப்பினர்கள் இறப்புக்கான நிதி மற்றும் தொழிற் கடன் வழங்கப்பட்டது. மேலும், வங்கி பேரவை அறக்கட்டளை சார்பில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ், வங்கி உதவியுடன் காக்கா சோலை மற்றும் ஓம்நகர் பகுதிகளில் சமுதாயக்கூடம் அமைக்க நிதி வழங்கப்பட்டது.
மேலும், பாக்கியநகர் சமுதாயக்கூடம் சீரமைக்கப்படுவதற்கான நிதியை, தாயகம் திரும்பியோர் அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்டது. நலத்திட்ட உதவிகளை பெற, நுாற்றுக்கணக்கான வங்கி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, வங்கியின் தற்கால வரவு செலவு அறிக்கை, வங்கியின் நிகர லாபம் கணக்குகள், வங்கி வழங்கும் சேவைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், கோத்தகிரி வங்கி கிளை மேலாளர் தட்சிணாமூர்த்தி, வங்கிப் பேரவை பிரதிநிதிகள் குமார், தம்பிராஜா, முருகேசன் மற்றும் ரமேஷ் குமார், வங்கி முன்னாள் பிரதிநிதிகள் அண்ணாதுரை, யோகராஜா உட்பட, பலர் பங்கேற்றனர். வங்கி துணை மேலாளர் பூமலர் நன்றி கூறினார்.