/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை
/
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை
ADDED : பிப் 15, 2024 12:18 AM
பெ.நா.பாளையம் : பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் தீர்மானம் நிறைவேற்றினர்.
இச்சங்கத்தின் பெரியநாயக்கன்பாளையம் கிளை சார்பில், திருமண மண்டபத்தில் கூட்டம் நடந்தது. கிளைச் செயலாளர் பேராசிரியர் வேலுசாமி வரவேற்றார். மயில்சாமி தலைமை வகித்தார்.
கூட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, போக்குவரத்து கழக ஓய்வு பெற்றவர்களின் நிலுவை கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாவட்ட தலைவர் பலராமன், மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ், கல்லூரி பேராசிரியர் சங்க ஒருங்கிணைப்பாளர் சுந்தரராஜன், மாவட்ட பொருளாளர் நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை மாவட்ட செயலாளர் சிங்காரவேலு ஒருங்கிணைத்து வழங்கினார். பொருளாளர் செல்லப்பன் நன்றி கூறினார்.

