sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 பந்தலுாரில் இருந்து கோவைக்கு நேரடி பஸ் இயக்க கோரிக்கை

/

 பந்தலுாரில் இருந்து கோவைக்கு நேரடி பஸ் இயக்க கோரிக்கை

 பந்தலுாரில் இருந்து கோவைக்கு நேரடி பஸ் இயக்க கோரிக்கை

 பந்தலுாரில் இருந்து கோவைக்கு நேரடி பஸ் இயக்க கோரிக்கை


ADDED : ஜன 20, 2026 06:35 AM

Google News

ADDED : ஜன 20, 2026 06:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்: 'பந்தலுாரில் இருந்து கோவைக்கு நேரடியாக பஸ் இயக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டு உள்ளது.

பந்தலுாரில் பயணிகள் நலச்சங்க தலைவர் பேபி ஆபிரகாம், முதல்வரின் தனி பிரிவிற்கு அனுப்பியுள்ள மனு:

பந்தலுார் தனி தாலுகா அறிவிக்கப்பட்டு, 27 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், பந்தலுாரில் இருந்து, கோவை உள்ளிட்ட சமவெளி பகுதிகளுக்கு பஸ் இயக்கம் இல்லாமல் உள்ளது.

தாளூர், கொளப்பள்ளி, சேரம்பாடி பகுதிகளில் இருந்து சமவெளி பகுதிகளுக்கு, இயக்கப்படும் பஸ்கள் பந்தலுார் வழியாக சென்றபோதும், இப்பகுதி பயணிகளுக்கு பயன் இல்லாமல் உள்ளது.

கூடலுார் மற்றும் ஊட்டி கிளையில் புதிய பஸ் வசதி இல்லை என கூறி அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

எனவே, கோவை மண்டலத்திலிருந்து, பந்தலுார், திருப்பூர், கோவை, ஈரோடு, திருச்சி பகுதிகளுக்கு பஸ் இயக்க வலியுறுத்தப்பட்ட நிலையில், பந்தலுாரில் இருந்து திருப்பூருக்கு காலை, 8-:20 மணிக்கு இயக்கப்பட்ட பஸ், சேரம்பாடி பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டதால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், மேட்டுப்பாளையம் மற்றும் திருப்பூர் பகுதிக்கு செல்லும் பயணிகளுக்கு இருக்கை வசதி இல்லாமல் பாதிக்கப்படுகின்றனர். இதனால், மூன்று முதல் நான்கு மணி நேரம் காத்திருந்து, பஸ்களில் நின்றபடி பயணிக்கும் அவலம் தொடர்கிறது.

அவசர நேரங்களில் தனியார் வாகனங்களில் வாடகைக்கு அமர்த்தி, கூடுதல் கட்டணம் செலுத்தி பயணிக்கும் நிலையும் தொடர்கிறது.

எனவே, கோவை கோட்டம் சார்பில் பந்தலுாரில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்சி மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளுக்கு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us