/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பகலில் வந்த சிறுத்தை குடியிருப்புவாசிகள் அச்சம்
/
பகலில் வந்த சிறுத்தை குடியிருப்புவாசிகள் அச்சம்
ADDED : அக் 21, 2024 04:37 AM
குன்னுார் : குன்னுார் வெலிங்டன் குடியிருப்பு பகுதியில் பகல் நேரத்தில் முகாமிட்ட சிறுத்தையால் பரபரப்பு ஏற்பட்டது.
குன்னுார் அருகே வெலிங்டன் கவுடர் தியேட்டர் இருந்த இடம் அருகே புதர்கள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் அருகில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது.
நேற்று காலை, 11:00 மணியளவில் புதர்கள் சூழ்ந்த இடத்தில் சிறுத்தை அமர்ந்திருந்தது.
சிறிது நேரத்தில் புதர்களுக்குள் சென்றது. இதனை கண்ட மக்கள் அச்சமடைந்துள்ளனர். தகவலின் பேரில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு கண்காணிப்பு பணியை துவக்கினர்.
மக்கள் கூறுகையில்,'குடியிருப்பு பகுதிக்கு சிறுத்தை வந்ததால் உடனடியாக கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும்,' என்றனர்.