/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மழைக்கு இடிந்த கால்வாய் தவிப்பில் குடியிருப்பு வாசிகள்
/
மழைக்கு இடிந்த கால்வாய் தவிப்பில் குடியிருப்பு வாசிகள்
மழைக்கு இடிந்த கால்வாய் தவிப்பில் குடியிருப்பு வாசிகள்
மழைக்கு இடிந்த கால்வாய் தவிப்பில் குடியிருப்பு வாசிகள்
ADDED : அக் 26, 2025 11:15 PM

பந்தலூர்: பந்தலூரில் கன மழையில் கால்வாய் இடிந்ததால், குடியிருப்பு வாசிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பந்தலூரில் இருந்து உப்பட்டி செல்லும் சாலை ஓரத்தில், தாழ்வான பகுதியில் கல்லட்டி பகுதியில், 30- குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
தனியார் தோட்டம் மற்றும் சாலைகளில் மழை காலங்களில், பெருக்கெடுத்து ஓடும் மழை நீர், குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் செல்ல, நெல்லியாளம் நகராட்சி கால்வாய் வசதி ஏற்படுத்தியது.
தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட கால்வாய், கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் இடிந்தது. இதனால், மழை நீர் , கழிவு நீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நகராட்சி நிர்வாகம், இடிந்த கால்வாயினை சீரமைத்து தர வேண்டும். என, இப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.