/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஓய்வு பெற்ற ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
/
ஓய்வு பெற்ற ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 21, 2025 10:09 PM

ஊட்டி, ; ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன், தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
தலைவர் காந்தராஜன் தலைமை வகித்தார். செயலாளர் பழனியப்பா,பொருளாளர் ஜெயராமன் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில்,'புதிய ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; 70 வயது முடிந்தவர்களுக்கு,10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும்; புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை களைய வேண்டும்; சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், ஓய்வூதியம், பணிக்கொடை ஆகியவை வழங்க வேண்டும்,' என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.