/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரி தேயிலை ஏலத்தில் ரூ.5.53 கோடி வருவாய் சரிவு
/
நீலகிரி தேயிலை ஏலத்தில் ரூ.5.53 கோடி வருவாய் சரிவு
நீலகிரி தேயிலை ஏலத்தில் ரூ.5.53 கோடி வருவாய் சரிவு
நீலகிரி தேயிலை ஏலத்தில் ரூ.5.53 கோடி வருவாய் சரிவு
ADDED : டிச 22, 2024 02:11 AM

குன்னுார்:நீலகிரி மாவட்டத்தில் தனியார் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை துாள், குன்னுார் ஏல மையத்திலும், கூட்டுறவு தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும், தேயிலை துாள் டீசர்வ் மையத்திலும் ஏலம் விடப்படுகிறது.
குன்னுார் ஏல மையத்தில், நேற்று முன்தினம் நிறைவுபெற்ற 51வது ஏலத்தில், 15.88 லட்சம் கிலோ தேயிலை துாள் ஏலத்திற்கு வந்தது. இதில், 14.04 லட்சம் கிலோ அதாவது 88.40 சதவீதம் விற்பனையானது. சராசரி விலை கிலோவிற்கு, 128.41 ரூபாய் என இருந்தது. சராசரி விலையில் கிலோவிற்கு 2 ரூபாய் ஏற்றம் கண்டது. மொத்த வருமானம், 18.03 கோடி ரூபாய் கிடைத்தது.
கடந்த ஏலத்தை விட, 4.82 லட்சம் கிலோ வரத்தும், 4.58 லட்சம் கிலோ விற்பனையும் குறைந்தது. ஒரே வாரத்தில், 5.53 கோடி ரூபாய் வருமானம் சரிந்தது.
டீசர்வ் ஏலத்தில் 1.20 லட்சம் கிலோ வரத்து இருந்த நிலையில், 1.19 லட்சம் கிலோ என, 99.59 சதவீதம் விற்றது. சராசரி விலை கிலோவிற்கு, 120.57 ரூபாயாக இருந்தது; 1.44 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது.
இரு ஏலங்களிலும் சேர்த்து, 19.71 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது. கடந்த ஏலத்தை விட, இந்த ஏலத்தில் சராசரி விலை உயர்வு ஏற்பட்ட போதும், வரத்து, விற்பனை குறைந்ததால் ஒரே வாரத்தில் 5.53 கோடி ரூபாய் மொத்த வருமானம் சரிந்தது.
வர்த்தகர்கள் கூறுகையில், 'தற்போது பனியின் தாக்கம் அதிகரித்து வருவதால் தேயிலை வரத்து குறைந்துள்ளது; வரத்துக்கு ஏற்ப விற்பனையும் சரிந்தது' என்றனர்.