/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோட்டாட்சியர் இல்லாத வருவாய் கோட்டம்; உள்ளூர் மக்கள் திண்டாட்டம்
/
கோட்டாட்சியர் இல்லாத வருவாய் கோட்டம்; உள்ளூர் மக்கள் திண்டாட்டம்
கோட்டாட்சியர் இல்லாத வருவாய் கோட்டம்; உள்ளூர் மக்கள் திண்டாட்டம்
கோட்டாட்சியர் இல்லாத வருவாய் கோட்டம்; உள்ளூர் மக்கள் திண்டாட்டம்
ADDED : ஏப் 27, 2025 09:14 PM
பந்தலுார்: கடந்த ஒரு மாதமாக, ஆர்.டி.ஓ. பணியிடம் பூர்த்தி செய்யாமல் கூடலுார் வருவாய் கோட்டம் செயல்படுவதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் எல்லை பகுதியாக, கூடலுார் வருவாய் கோட்டம் உள்ளது. இங்கு கூடலுார் மற்றும் பந்தலுார் தாலுகாக்கள் உள்ளன. மாநில எல்லை பகுதியாக உள்ளதால், 11 சோதனை சாவடிகளும் செயல்பட்டு வருவதுடன், அடிக்கடி வனவிலங்கு----மனித மோதல்கள் ஏற்பட்டு சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும்.
மேலும், கிராமங்களில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற, அவ்வப்போது வனத்துறை தடை விதிக்கும் நிலையில் அதற்கும் மக்கள் போராடும் நிலை ஏற்படுகிறது.
இது போன்ற நேரங்களில், 'மாவட்ட கலெக்டர் நேரில் வந்து பேச வேண்டும்,' என, கோரிக்கையை முன்வைத்து, பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் நிலையில், ஆர்.டி.ஓ., மூலம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கூடலுாரில் பணியாற்றி வந்த ஆர்.டி.ஓ., இடமாறுதல் பெற்று சென்று விட்ட நிலையில், இங்கு நியமனம் செய்யப்பட்ட, ஆர்.டி.ஓ., இதுவரை பொறுப்பேற்கவில்லை.
இதனால், குன்னுார் சப்-கலெக்டர் கூடுதல் பொறுப்பாக கூடலுார் பகுதியையும் கவனித்து வருகிறார்.
சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படும் போது, உடனடியாக சம்பவ இடத்திற்கு சப்-கலெக்டர் வர முடியாத நிலையில், பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. பொதுமக்கள் தங்களின் பல்வேறு குறைகளுக்காக நேரில் சந்தித்து தீர்வு காண்பது, போன்றவற்றிலும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
உள்ளூர் மக்கள் கூறுகையில், 'மாநில எல்லையில் இரண்டு தாலுக்காக்களை, முறையாக கவனிக்கும் வகையில், ஆர்.டி.ஓ., பணியிடத்தை பூர்த்தி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

