/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வருவாய் துறை அலுவலர்கள் காலவரையற்ற போராட்டம்
/
வருவாய் துறை அலுவலர்கள் காலவரையற்ற போராட்டம்
ADDED : பிப் 28, 2024 09:10 PM

ஊட்டி : தமிழக வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டத்தால் சான்றிதழ் கொடுக்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
'பழைய ஓய்வூதிய திட்டம், காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும்,' உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும், வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் பல்வேறு கட்ட போராட்டங்களில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டு வந்தனர்.
நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்து போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதன் ஒருபகுதியாக, நீலகிரி மாவட்டத்திலும் வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வருவாய்த்துறை ஊழியர்களுடன் அனைத்து அரசு ஊழியர்களும் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், நேற்று ஊட்டி கலெக்டர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம் உட்பட பல்வேறு வருவாய் துறை அலுவலகங்களில் ஊழியர்கள் வேலைக்கு செல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது. தொடர் போராட்டத்தால் பொதுமக்களின் அத்தியாவசிய பணிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, ஒரு சில ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். எனினும், தொடர் போராட்டம் காரணமாக பல்வேறு சான்றிதழ் வழங்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் மக்கள் கலெக்டர் அலுவலகம் வந்து திரும்பி செல்கின்றனர்.

