/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பஸ் நிலையத்தில் வேகத்தடை இல்லாததால் விபத்து அபாயம்
/
பஸ் நிலையத்தில் வேகத்தடை இல்லாததால் விபத்து அபாயம்
பஸ் நிலையத்தில் வேகத்தடை இல்லாததால் விபத்து அபாயம்
பஸ் நிலையத்தில் வேகத்தடை இல்லாததால் விபத்து அபாயம்
ADDED : டிச 17, 2024 09:29 PM
கோத்தகிரி; கோத்தகிரி பஸ் நிலையம் பகுதியில், வேகத்தடை அமைக்காததால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.
கோத்தகிரி பஸ் நிலையத்தில், ஊட்டி, குன்னுார் மற்றும் கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் நிறுத்தப்படுகின்றன. தவிர, மினி பஸ்களின் இயக்கமும் உள்ளது.
மேலும், தனியார் வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன. பள்ளி மாணவர்கள் உட்பட, மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. வாகனங்கள் அதி வேகத்தில் இயக்கப்படுவதால், விபத்து நடைபெறாமல் இருக்க வேகத்தடை அமைக்கப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜனாதிபதியின் வருகைக்காக, பல பகுதிகளில் சாலையில் அமைக்கப்பட்ட வேகத்தடை அகற்றப்பட்டது. மீண்டும் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.
எனவே, மக்கள் நலன் கருதி, பஸ் நிலையம் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் மீண்டும் வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலை துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.