/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மண் அரிப்பால் சாலை சேதமடையும் அபாயம்
/
மண் அரிப்பால் சாலை சேதமடையும் அபாயம்
ADDED : செப் 26, 2025 09:03 PM

கூடலுார்:
கூடலுார் மங்குழி அருகே மண் அரிப்பு ஏற்பட்டு சாலையோரம் ஏற்பட்டு வரும் குழியினால், ஆற்றை ஒட்டிய தடுப்புச்சுவர் சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது.
கூடலுார் மைசூரு தேசிய நெடுஞ்சாலை, மரப்பாலம் அருகே, மங்குழி கிராம சாலை பிரிந்து செல்கிறது.
சாலையில் மங்குழி ஆற்றின் குறுக்கே, கட்டப்பட்ட பாலம் சில ஆண்டுகளுக்கு முன் பருவமழையின் போது, ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சேதமடைந்து, போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். தொடர்ந்து, 1:45 கோடி ரூபாய் செலவில் புதிய பாலம் அமைக்கப்பட்டு, போக்குவரத்து துவங்கப்பட்டது. மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், ஆற்றின் கரையில் ஏற்கனவே அமைக்கப்பட்ட தடுப்புச்சுவரை ஒட்டி, மண் அரிப்பு ஏற்பட்டு, சாலையோரம் சேதமடைந்து வருகிறது. இதனால் தடுப்புச் சுவர் மற்றும் அதனை ஒட்டிய சாலையோரம் சேதமடைந்து, மீண்டும் வாகன போக்குவரத்து துண்டிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனை, முன்னெச்சரிக்கையாக தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.