/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் சாலை சேதமடையும் அபாயம்
/
மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் சாலை சேதமடையும் அபாயம்
ADDED : செப் 01, 2025 10:09 PM

கூடலுார்; கூடலுார் கோழிபாலம் அருகே, மண்சரிவு ஏற்பட்ட பகுதியில், சாலை சேதமடையும் அபாயம் உள்ளது.
கூடலுார் கோழிக்கோடு சாலை, கோழிப்பாலம் அரசு கல்லுாரி அருகே, வளைவான சாலையோரத்தில், சில ஆண்டுகளுக்கு முன் மண் சரிவு ஏற்பட்டது. நெடுஞ்சாலை துறையினர், அப்பகுதியில் எச்சரிக்கை பலகை வைத்து தடுப்பு ஏற்படுத்தினர். இதுவரை சீரமைக்கவில்லை.
அப்பகுதியில் இரும்பு தடுப்புகள் சேதமடைந்து, சாலையோரம் பலமிழந்து வருகிறது. மீண்டும் மண் சரிவு ஏற்பட்டு, சாலை சேதமடைந்து போக்குவரத்து பாதிக்கும் ஆபத்து உள்ளது.
நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு செய்து, தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஓட்டுனர்கள் கூறுகையில், 'வளைவான இப்பகுதியில் உள்ள சாலையோரம், ஏற்கனவே ஏற்பட்ட மண்சரிவால் சாலை பலமிழந்து சேதமடைந்து போக்குவரத்து பாதிக்கும் ஆபத்து உள்ளது.
அதிகாரிகள் ஆய்வு செய்து, சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.