/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலை மறியல் போராட்டம் : கலெக்டர் முற்றுகையால் பரபரப்பு
/
சாலை மறியல் போராட்டம் : கலெக்டர் முற்றுகையால் பரபரப்பு
சாலை மறியல் போராட்டம் : கலெக்டர் முற்றுகையால் பரபரப்பு
சாலை மறியல் போராட்டம் : கலெக்டர் முற்றுகையால் பரபரப்பு
ADDED : ஜன 08, 2024 12:08 AM
பந்தலூர்;பந்தலூரில் சிறுத்தையை பிடிக்க வலியுறுத்தி, நடந்த போராட்டத்தின் போது கலெக்டரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பந்தலுாரில் சிறுத்தை தாக்கி சிறுமி பலியான சம்பவத்தை அடுத்து, சிறுத்தையை பிடிக்கும் பணி நடந்தது. போலீசார் பொதுமக்களிடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தொடர்ந்து மீண்டும் நேற்று காலை முதல் கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகா முழுவதும் கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.
சிறுத்தை நேற்று மாலை பிடிக்கப்பட்ட நிலையில் மேங்கொரஞ்ச் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த, 2- ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மத்தியில் கலெக்டர் அருணா பேச்சுவார்த்தையில் ஈடுபட முயன்றார்.
சிறுத்தை உடனடியாக பிடிக்க வேண்டும் என, கலெக்டரை முற்றுகையிட்டதால் கலெக்டர் திரும்பி சென்றார்.
எஸ்.பி.சுந்தரவடிவேல் தலைமையிலான போலீசார் வந்து சிறுத்தை பிடிக்கப்பட்டது என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். அப்போது சிலர் கூடலூர் டி.எஸ்.பி. யை தள்ளி விட்டனர். இதனால் பொதுமக்கள் மற்றும் போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதுடன் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.