தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ சாலை மறியல் போராட்டம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை

 சாலை மறியல் போராட்டம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை

 சாலை மறியல் போராட்டம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை


ADDED : பிப் 03, 2026 05:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 03, 2026 05:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கூடலுார்: நல்ல நிலையில் உள்ள நாடுகாணி -தேவாலா அட்டி சாலையை, தேவையின்றி சீரமைப்பதை கைவிட வலியுறுத்தி, எம்.எல்.ஏ., தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டார்.

கூடலுார் நாடுகாணியில் இருந்து, தேவாலா அட்டி சாலை பிரிந்து செல்கிறது. இச்சாலையில் நாடுகாணி முதல், டான்டீ செட் வரை, 1.3 கி.மீ., சாலை சீரமைப்பு பணி துவங்கி நடந்தது. அதில், 800 மீட்டர் துாரம் சீரமைக்கும் பணி நடந்தது.

இந்நிலையில், 'நெல்லியாளம் நகராட்சி பகுதியில், சேதமடைந்த பல சாலைகள் சீரமைக்க நடவடிக்கை இல்லாத நிலையில், நல்ல நிலையில் உள்ள, இச்சாலையை தேவையின்றி சீரமைப்பதை நிறுத்த வேண்டும். சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்' என, வலியுறுத்தி, கூடலுார் எம்.எல்.ஏ., ஜெயசீலன் தலைமையில் அ.தி.மு.க.,வினர் நேற்று முன்தினம் காலை, 11:15 மணிக்கு, நாடுகாணி - தேவாலா அட்டி சாலையில் அமர்ந்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

தேவாலா டி.எஸ்.பி., கல்யாணகுமார் மற்றும் போலீசார், 'சாலை பணியை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, சாலை மறியல் போராட்டத்தை கைவிட வேண்டும்,' என, வலியுறுத்தினார். அதனை ஏற்க மறுத்த, எம்.எல்.ஏ., 'நகராட்சி அதிகாரிகள் வரவேண்டும்,' என, கூறி போராட்டத்தை தொடர்ந்தார்.

அதன்பின், நெல்லியாளம் நகராட்சி பொறியாளர் விஜயகுமார்,'இந்த சாலையில் மற்றப்பகுதிகளை சீரமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்படும்,' என தெரிவித்தார். அதனை ஏற்று போராட்டத்தை கைவிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us