/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ரூ.6.25 கோடியில் சாலை சீரமைப்பு : வாகன ஓட்டிகள் நிம்மதி
/
ரூ.6.25 கோடியில் சாலை சீரமைப்பு : வாகன ஓட்டிகள் நிம்மதி
ரூ.6.25 கோடியில் சாலை சீரமைப்பு : வாகன ஓட்டிகள் நிம்மதி
ரூ.6.25 கோடியில் சாலை சீரமைப்பு : வாகன ஓட்டிகள் நிம்மதி
ADDED : நவ 07, 2025 08:46 PM

கூடலூர்: எல்லையை ஒட்டிய, நாடுகாணி - கீழ்நாடுகாணி சாலை சீரமைப்பு பணியை தரமாக மேற்கொள்ள வேண்டும். என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
கூடலூர், நாடுகாணியிலிருந்து கேரளா மாநிலம் நிலம்பூர் சாலை பிரிந்து செல்கிறது. இச்சாலை, தமிழகம்,- கேரளா,- கர்நாடகாவை இணைக்கும் முக்கிய வழிதடமாக உள்ளது. கேரளா சுற்றுலா பயணியர் இவ்வழியாக நீலகிரிக்கு அதிகளவில் வந்து செல்கின்றனர்.
கேரளாவிலிருந்து நீலகிரிக்கு வரும் வாகனங்களுக்கு, நாடுகாணி சோதனை சாவடியில் நுழைவு கட்டணம் வசூல் செய்து வருகின்றனர். ஆனால், தமிழக - கேரளா எல்லையான கீழ் நாடுகாணி முதல், நாடுகாணி இடையே சேதமடைந்த சாலை சீரமைக்க எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால், சுற்றுலா பயணியர், ஓட்டுனர்கள் அதிருப்தி அடைந்தனர். தற்போது, சாலை சீரமைக்க, 6.25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து, சாலை சீரமைப்பு பணிகள் துவங்கி நடந்து வருகிறது.
ஓட்டுனர்கள், கூறுகையில், 'நீண்ட போராட்டத்துக்குப் பின் சாலை சீரமைப்பு பணியை துவங்கி இருப்பதை வரவேற்கிறோம். சாலை பணிகளை தரமாக மேற்கொள்ள வேண்டும். அதிகாரிகள் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர். கோட்ட பொறியாளர் குழந்தைராஜ் கூறுகையில், ''சாலையில் உள்ள குழிகளில் வெட்மிக்ஸ் கலவை நிரப்பி சாலை சீரமைக்கப்படுகிறது. மீண்டும் சேதமடைய வாய்ப்பில்லை. பணிகள் குறித்து புகார் இருப்பின், தகவல் தெரிவித்தால் ஆய்வு செய்து சரி செய்யப்படும்' என்றார்.

