/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நாடு முழுவதும் கின்னஸ் சாதனைக்கான ஹாக்கி : நீலகிரியில் ஒரே நேரத்தில் 9 இடங்களில் பதிவு
/
நாடு முழுவதும் கின்னஸ் சாதனைக்கான ஹாக்கி : நீலகிரியில் ஒரே நேரத்தில் 9 இடங்களில் பதிவு
நாடு முழுவதும் கின்னஸ் சாதனைக்கான ஹாக்கி : நீலகிரியில் ஒரே நேரத்தில் 9 இடங்களில் பதிவு
நாடு முழுவதும் கின்னஸ் சாதனைக்கான ஹாக்கி : நீலகிரியில் ஒரே நேரத்தில் 9 இடங்களில் பதிவு
ADDED : நவ 07, 2025 08:45 PM
குன்னூர்: நம் நாட்டில், ஹாக்கி விளையாட்டின் 100வது ஆண்டை சிறப்பிக்கும் வகையில், நாடு முழுவதும் நேற்று நடந்த கின்னஸ் சாதனைக்கான ஹாக்கி விளையாட்டு, நீலகிரியில், ஒரே நேரத்தில், 9 மைதானங்களில், நடத்தப்பட்டது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் அறிஞர் அண்ணா அரசு பள்ளி, உபதலை அரசு பள்ளி, அருவங்காடு கார்டைட் பள்ளி, ஊட்டி கிரசன்ட் பள்ளி, செயின்ட் ஹில்டாஸ், ஹெப்ரான் பள்ளி, செயின்ட் ஜார்ஜ் பள்ளி, மஞ்சூரில் சாம்ராஜ் பள்ளி, ஜெகதளா என 9 மைதானங்களில், ஒரே நேரத்தில், ஹாக்கி யூனிட் ஆப் நீலகிரிஸ் அமைப்பு சார்பில் ஹாக்கி விளையாட்டு நடந்தன.
குன்னூர் அரசு மேல் நிலைப்பள்ளி மைதானத்தில் துவக்கி வைத்த அமைப்பின் தலைவர் அனந்தகிருஷ்ணன் பேசுகையில், நம் நாட்டில் ஹாக்கி விளையாட்டை ஊக்குவிக்க, 1925ம் ஆண்டு நவ. 7 ல் ஹாக்கி சங்கம் பதிவு செய்யப்பட்டது.
இதன் பிறகு, இந்திய ஹாக்கி அணி, ஒலிம்பிக், உலகக் கோப்பை, காமன்வெல்த் ஆசியா விளையாட்டு சேம்பியன் போட்டி என பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று, நம் நாட்டிற்கு பெருமை சேர்த்தது.
இதனை கவுரவிக்கும் விதமாக நாடு முழுவதும் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது.
நாடு முழுவதும் உள்ள ஹாக்கி வீரர்கள், வீராங்கனைகள், பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவரும் கிராமங்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மைதானங்களில் காலை 7 மணி முதல் 10 மணி வரை, ஒரே நேரத்தில், ஹாக்கி விளையாடினர்.
கின்னஸ் சாதனைக்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. என்றார்.
உபதலையில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சத்ய சாய் அறக்கட்டளை சுவாமி மேகநாத் பேசுகையில், நீலகிரியில் ஹாக்கி விளையாட்டை ஊக்குவிக்கவும், இங்கு செயற்கை புல்வெளி மைதானம் அமைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும், என்றார்.
விழாவில் சாய் அறக்கட்டளை நிர்வாகிகள் அருண் சங்கர், ராமன், நாராயணன், முன்னாள் ராணுவ வீரர்கள் சுப்ரமணி மகேஷ், கிரி உட்பட பலர் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை, ஹாக்கி யூனிட் ஆப் நீலகிரிஸ் அமைப்பு தலைவர் அனந்தகிருஷ்ணன், துணைத் தலைவர் சுரேஷ்குமார், செயலாளர் பாலமுருகன், பொருளாளர் ராஜா மற்றும் மூத்த வீரர்கள், கிளப் நிர்வாகிகள் செய்தனர்.

