/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
' அட்மா' திட்டத்தில் விளை நிலங்கள் ஆய்வு: இயற்கை உரம் பயன்படுத்த அறிவுரை

ADDED : நவ 07, 2025 08:45 PM
கோத்தகிரி: கோத்தகிரியில் 'அட்மா' திட்டத்தின் கீழ், விளை நிலங்களை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
ஊட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலைய வேளாண் விஞ்ஞானி கவிதா, கோத்தகிரி வட்டார தோட்டக்கலை அலுவலர் கவின் பிரசாத் மற்றும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை அலுவலர்கள், கீழ் கோத்தகிரி, வ.உ.சி., நகர் மற்றும் பேரகணி உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களில் கள ஆய்வு மேற்கொண்டர்.
அதில், மேரக்காய் செடிகளில் வைரஸ் நோய் தாக்குதல், இதர பயிர்களுக்கு நோய் தடுக்கும் பாதுகாப்பு முறை, நோய் எதிர்ப்பு திறன் கொண்ட உரம் இடுதல், பயிர் சுழற்சி முறைகள், உயிர் காரணி மற்றும் இயற்கை உரம் பயன்பாடு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், நோய் மற்றும் பூச்சி தாக்குதலில் இருந்து, பயிர்களை பாதுகாக்கும் முறை குறித்து, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில், உருளைக் கிழங்கு பயிரில் பாக்டீரியா அழுகல் நோய் ஏற்படுவதை எவ்வாறு கட்டுப் படுத்துவது என, விவசாயிகளின் சந்தேகங்களுக்கு, அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.
ஆய்வின் போது, 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று பயனடைந்தனர்.