ADDED : நவ 07, 2025 08:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னூர்: குன்னூரில் நிலவும் அசாதரண சூழலால் சிம்ஸ் பூங்காவில் மலர்கள் காய்ந்து வருகிறது.
குன்னூர் சிம்ஸ்பூங்காவில் அக்., நவ., மாதங்களில் இரண்டாவது சீசனில் அதிகளவில் சுற்றுலா பயணியர் வருகை தருகின்றனர்.
குன்னுார் சுற்றுவட்டாரத்தில் கடந்த சில நாட்களாக மழை, மேகமூட்டம், கடுங்குளிர் என, அசாதரண சூழல் நிலவி வருகிறது. குன்னுார் சிம்ஸ் பூங்காவில் டேலியா, மேரிகோல்டு உட்பட மலர் செடிகள் அழுகி காய்ந்துள்ளது. இவற்றை தோட்டக்கலைத் துறை பணியாளர்கள் அகற்றி வருகின்றனர். எனினும் சால்வியா, பிளாக்ஸ் உட்பட சில மலர் வகைகள் பூத்துக்குலுங்கி சுற்றுலா பயணியரை கவர்ந்து வருகிறது.

