ADDED : நவ 07, 2025 08:44 PM

குன்னூர்: குன்னூரில் பள்ளி மாணவ, மாணவிகளின் நலனுக்காக, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன.
குன்னூர் காவல்துறை மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நல சங்கம் சார்பில், எய்ட்ஸ் விழிப்புணர்வு, போதை ஒழிப்பு மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த பேரணி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
பெட்போர்டு பகுதியில் துவங்கிய பேரணியை, டி.எஸ்.பி., ரவி துவக்கி வைத்தார். மவுண்ட் ரோடு வழியாக வந்த பேரணி பஸ் ஸ்டாண்டில் நிறைவு பெற்றது.
நிகழ்ச்சியில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நல சங்கம் சார்பில், கலைக்குழுவி னரின் தெரு நாடகத்தில் ஆடல், பாடல்களுடன்விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
எய்ட்ஸ் விழிப்புணர்வு, போதைகளால் ஏற்படும் சீரழிவு, லஞ்ச ஊழலை களைய, தகவல் அறியும் உரிமை சட்டம் பயன்படுத்துவது உள்ளிட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பர்வீன் பானு, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க அலுவலர் அறிவழகன், குன்னூர் அரசு மருத்துவமனை டாக்டர் நாகராஜ், ஆலோசகர்கள் நந்தகுமார், மகேஷ்குமார், சுப்ரமணி உட்பட பலர் பங்கேற்றனர்.
குன்னூர் அறிஞர் அண்ணா அரசு பள்ளி, சாந்தி விஜய் பெண்கள் பள்ளி, மேரீஸ் பள்ளி, புல்மோர், அந்தோணியர் பள்ளி, ஐ.டி ஐ. , மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

