/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம்
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம்
ADDED : ஜன 31, 2024 11:42 PM
அன்னுார் : அன்னுாரில் நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
தமிழக அரசின், நெடுஞ்சாலைத்துறையின், அன்னுார் உட்கோட்டம் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம் அன்னுார் கைகாட்டியில் நடந்தது. பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சாலை பாதுகாப்பு கோட்ட பொறியாளர் மனுநீதி பேசுகையில், இருசக்கர வாகனத்தை ஓட்டுவோர் மட்டும் ஹெல்மெட் அணிந்தால் போதாது. உடன் பயணம் செய்பவரும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். காரில் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும். தேவைப்படும் நேரத்தில் மட்டுமே வாகனத்தில் ஹை பீம் லைட் பயன்படுத்த வேண்டும்.
குடிபோதையில் வாகனம் இயக்குவோர் அதிக அளவில் விபத்துக்கு உள்ளாவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. போதையில் வாகனங்களை இயக்குவதை அறவே தவிர்க்க வேண்டும். ஓடும் பஸ்ஸில் ஏறவோ, இறங்கவோ கூடாது. ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கு வழி விட வேண்டும். எதிரில் சாலை தெரியாத நிலையில் வாகனங்களை முந்தி செல்லக்கூடாது, என்றார்.
நிகழ்ச்சியில், நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் மணிவண்ணன், பேரூராட்சித் தலைவர் பரமேஸ்வரன், போலீஸ் எஸ்.ஐ., க்கள் ஆறுமுக நயினார், சிவக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.