/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : பிப் 14, 2024 11:59 PM

அன்னுார், - அன்னுாரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
அன்னுார் போலீஸ் ஸ்டேஷன், எஸ்.கே.எஸ். நினைவு கண் மருத்துவமனை மற்றும் நைருதி கலை அறிவியல் கல்லூரி சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி, அன்னுாரில் நேற்று நடந்தது. கோவை ரோட்டில், ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் முன்பு பேரணியை போலீஸ் எஸ்.ஐ., கனகராஜ் துவக்கி வைத்தார். கோவை ரோடு வழியாக பேரணி, அன்னுார் கைகாட்டியில் முடிவடைந்தது. சாலை பாதுகாப்பு விதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தியபடி, விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியபடி, ஊர்வலமாக சென்றனர். இதில் மாணவ, மாணவியர், கண் மருத்துவமனை ஊழியர்கள் பங்கேற்றனர்.

