/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்பு இடிந்துள்ளதால் விபத்து அபாயம்
/
கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்பு இடிந்துள்ளதால் விபத்து அபாயம்
கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்பு இடிந்துள்ளதால் விபத்து அபாயம்
கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்பு இடிந்துள்ளதால் விபத்து அபாயம்
ADDED : மார் 19, 2025 08:04 PM

கோத்தகிரி; கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையில் பாதுகாப்பு தடுப்பு சுவர் இடித்துள்ளதால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.
சமவெளி பகுதியில் இருந்து, நீலகிரி மாவட்டத்திற்கு குன்னுார் மற்றும் கோத்தகிரி வழியாக, சுற்றுலா வாகனங்கள் உட்பட, நாள்தோறும் பல ஆயிரம் வாகனங்கள் வருகின்றன.
குன்னுார் - மேட்டுப்பாளையம் சாலையில், கொண்டை ஊசி வளைவுகள் நிறைந்துள்ளதால், பெரும்பாலான வாகனங்கள் கோத்தகிரி வழியாக,ஊட்டிக்கு சென்று வருகின்றன. இதனால், எரிபொருள் சிக்கனத்துடன், பயண நேரமும் குறையும் என்பதால், டிரைவர்கள் இவ்வழிதடத்தில் சென்று வர அதிகம் விரும்புகின்றனர். கோடை விழா நாட்களில், கோத்தகிரி சாலை ஒரு வழி பாதையாக மாற்றப்படுகிறது.
நெடுஞ்சாலைத் துறை சார்பில், சாலை மிக நேர்த்தியாக சீரமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், செங்குத்தான மலைப்பாதையில், குஞ்சப்பனை --தட்டப்பள்ளம் இடையே, சாலையோர தடுப்புகள் இடிந்துள்ளன. இதனால், வாகனங்கள் இரவில் சென்று வரும்போது, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது.
கடந்த வாரம் குஞ்சப்பனை அருகே, தடுப்புகள் இல்லாததால் ஒரு வாகனம், 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஜீப்பில் பயணித்த இருவர், சிறு காயங்களுடன் உயிர்த்தப்பினர்.
வாகன ஓட்டுனர்கள் கூறுகையில், 'நீலகிரியில் வரும் மே மாதம் கோடை விழா துவங்க உள்ள நிலையில், வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். அத்துடன், மழை பொழிவும் இருக்கும் என்பதால், நெடுஞ்சாலை துறையினர் சாலை ஓரத்தில் உடைந்த தடுப்புகளை, பாதுகாப்பு கருதி, சீரமைப்பது அவசர அவசியம்,' என்றனர்.