/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாணவியர் உருவாக்கிய 'ரோபோ'; அறிவியல் கண்காட்சியில் ஆச்சரியம்
/
மாணவியர் உருவாக்கிய 'ரோபோ'; அறிவியல் கண்காட்சியில் ஆச்சரியம்
மாணவியர் உருவாக்கிய 'ரோபோ'; அறிவியல் கண்காட்சியில் ஆச்சரியம்
மாணவியர் உருவாக்கிய 'ரோபோ'; அறிவியல் கண்காட்சியில் ஆச்சரியம்
ADDED : டிச 06, 2024 10:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார் ; குன்னுார் ஜோசப் மேல்நிலை பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில், மாணவியர் உருவாக்கிய 'ரோபோ' அனைவரையும் கவர்ந்தது.
குன்னுார் ஜோசப் மேல்நிலை பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. கண்காட்சியை காரக்பூர் ஐ.ஐ.டி., முன்னாள் மாணவரான அறிவியல் நிபுணர் வினம்சி பால் துவக்கி வைத்தார்.
கண்காட்சியில், 11ம் வகுப்பு மாணவியர் அதிதி, ஸ்டேஸி, திவ்யா, தரண்யா ஆகியோர் மொபைல் மூலம் இயங்கும் ரோபோவை உருவாக்கி காட்சிபடுத்தியது அனைவரையும் கவர்ந்தது.
வீணாகும் பொருட்கள் மற்றும், 9 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கொண்டு இதனை உருவாகி உள்ளனர்.