/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'ரோபோடிக்' தொழில்நுட்பம் அரசு பள்ளியில் பயிற்சி
/
'ரோபோடிக்' தொழில்நுட்பம் அரசு பள்ளியில் பயிற்சி
ADDED : ஜன 22, 2025 11:12 PM

கூடலுார்; கூடலுார் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, 'ரோபோடிக்' தொழில் நுட்பம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
கூடலுார் பகுதியில் உள்ள கிராமப்புற அரசு பள்ளி மாணவர்கள் 'ரோபோடிக்' தொழில்நுட்பம், 3டி பிரிண்டர், சோலார் பேனல் செயல்பாடுகள் குறித்து, பயிற்சி அளிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக, புளியம்பாறை அரசு உயர்நிலை பள்ளியில் சிறப்பு ஆய்வகம் அமைந்துள்ளது.
முதல் கட்டமாக, மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில், கூடலுார் மற்றும் ஸ்ரீமதுரை அரசு உயர் நிலைப்பள்ளி, புளியம்பாறை மற்றும் புத்துார் வயல் அரசு உயர்நிலை பள்ளி, முதல் மைல் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் நேற்று, புளியாம்பாறை அரசு உயர்நிலை பள்ளியில் துவங்கியது.
முகாமில், பள்ளி ஆசிரியர் சங்கர் தலைமை வகித்து பேசுகையில், ''நவீன தொழில் நுட்பத்தை, அரசு பள்ளி மாணவர்கள் கற்று கொண்டு, அதனை உருவாக்கும் வகையில், அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, ரோபோடிக் தொழில்நுட்பம், சோலார் பேனல் தொழில்நுட்பம் குறித்து, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இதன், முதல் கட்டமாக, 5 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது,'' என்றார்.
தொடர்ந்து, ஆய்வகத்தின் திட்ட மேலாளர் சபரிநாதன், பெங்களூரை சேர்ந்த பயிற்றுனர் சந்தீப்பார்த்திபன், ஐதராபாத்தை சேர்ந்த மோகன் ஆகியோர், சிறிய 'ரோபோட்டிக்' மூலம் இயந்திரங்கள் இயங்குவது குறித்து மாணவர்களுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.
தொடர்ந்து, மற்ற பள்ளி ஆசிரியர்களுக்கும் இது தொடர்பான பயிற்சி வழங்கப்பட உள்ளது.