UPDATED : நவ 16, 2026 06:08 PM
ADDED : நவ 16, 2026 06:08 PM

அ நிறம் | அளவு
குன்னுார்: நீலகிரி மலை ரயில் பாதையில் ஹில்குரோவ் அருகே விழுந்த பாறை வெடி வைத்து தகர்க்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம், 23ல் நள்ளிரவில் பெய்த கனமழையால், மேட்டுப்பாளையம் குன்னுார் மலை ரயில் பாதையில் நிலச்சரிவு, மண்சரிவு ஏற்பட்டது. சீரமைப்பு பணிகள் நடந்த போதும் மீண்டும் பாறை கற்கள் விழுந்ததுடன், மண்சரிவும் ஏற்பட்டதால், மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் மற்றும் சிறப்பு மலை ரயில், 18-ம் தேதி (நாளை) வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே மலைப்பாதையில் விழுந்த பாறைகள் தகர்க்கப்பட்டன. இந்நிலையில், நேற்று, 2வது முறையாக ஹில் குரோவ் அருகே விழுந்த கிடந்த பாறை வெடி தகர்க்கப்பட்டு, அப்புறப்படுத்தப்பட்டது.
