தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/குன்னுாரில் அமர்க்களமாக நடந்த சூரசம்ஹாரம்

குன்னுாரில் அமர்க்களமாக நடந்த சூரசம்ஹாரம்

குன்னுாரில் அமர்க்களமாக நடந்த சூரசம்ஹாரம்


ADDED : நவ 16, 2026 06:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 16, 2026 06:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குன்னுார்: குன்னுார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று (நவ.,15) இரவு வரை சூரசம்ஹாரம் நிகழ்வு அமர்க்களமாக நடந்தது.

குன்னுார் வி.பி., தெரு பகுதியில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த வாரம் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. விழாவில், முருகனுக்கு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை, கொடியேற்றம், அன்னதானம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.

6 நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள், சத்ரு சம்ஹார திருசதி பாராயணம், வேல் வாங்கும் நிகழ்ச்சி, சுவாமி திருவீதி உலா, சூரசம்ஹாரம் நிகழ்வு உள்ளிட்டவைகளில் பங்கேற்றனர். அதில், முருகபெருமான் பார்வதியிடம் வேல் வாங்குதல், விநாயகரிடம் அருள் பெறுதல், அசுரர்களுடன் போர் புரிந்து சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி பக்தர்களை பரவசப்படுத்தியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us