தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/பர்லியாரில் ‘கம்ப்ரசரில்’ பாறைகள் உடைப்பு: விரைவில் போக்குவரத்தை துவக்க திட்டம்

பர்லியாரில் ‘கம்ப்ரசரில்’ பாறைகள் உடைப்பு: விரைவில் போக்குவரத்தை துவக்க திட்டம்

பர்லியாரில் ‘கம்ப்ரசரில்’ பாறைகள் உடைப்பு: விரைவில் போக்குவரத்தை துவக்க திட்டம்


UPDATED : நவ 18, 2026 05:49 PM

ADDED : நவ 18, 2026 05:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 18, 2026 05:49 PM ADDED : நவ 18, 2026 05:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குன்னுார்: குன்னுார்– மேட்டுப்பாளையம் சாலை பர்லியாரில், கம்பரசர்கள் வைத்து பாறைகள் உடைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

குன்னுார் மேட்டுப்பாளையம் மலை பாதை பர்லியார் பகுதியில் கடந்த, 23ம் தேதி நள்ளிரவு நிலச்சரிவு காரணமாக பஸ் மீது பாறை விழுந்ததில் அரசு பஸ் டிரைவர் பலியானார். மற்ற சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்ற நிலையில், பர்லியாரில் அபாய பாறைகள்;மண்ணை அகற்றி விரிவாக்கத்துடன் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. உயரமான அபாய நிலையில் இருந்த பாறைகள் உயிரை பணயம் வைத்து பொக்லைன் உதவியுடன் அகற்றப்படுகிறது.இந்நிலையில், நேற்று கம்ப்ரசரில் பாறைகள் உடைக்கும் பணி நடந்தது. கடந்த, 25 நாட்களாக போக்குவரத்து தடை நீடிக்கும் நிலையில் விரைவில் துவங்க வாய்ப்பு உள்ளது.

நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில்,‘ 20ம் தேதி ( நாளை) பணிகள் நிறைவு பெறும். அதன் பின் உயர் அதிகாரிகள் ஆய்வுக்கு பிறகு விரைவில் போக்குவரத்து துவங்கப்படும்,’ என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us