/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வாழ்வாதாரத்திற்கு அடித்தளம் அமைக்கும் அக்னி வீரர்கள்; மெட்ராஸ் ரெஜிமென்ட் மையத்திற்கு 'ராயல் சல்யூட்'
/
வாழ்வாதாரத்திற்கு அடித்தளம் அமைக்கும் அக்னி வீரர்கள்; மெட்ராஸ் ரெஜிமென்ட் மையத்திற்கு 'ராயல் சல்யூட்'
வாழ்வாதாரத்திற்கு அடித்தளம் அமைக்கும் அக்னி வீரர்கள்; மெட்ராஸ் ரெஜிமென்ட் மையத்திற்கு 'ராயல் சல்யூட்'
வாழ்வாதாரத்திற்கு அடித்தளம் அமைக்கும் அக்னி வீரர்கள்; மெட்ராஸ் ரெஜிமென்ட் மையத்திற்கு 'ராயல் சல்யூட்'
UPDATED : டிச 26, 2025 09:16 AM
ADDED : டிச 26, 2025 06:52 AM

குன்னுார்: குன்னுார் வெலிங்டனில் பழமை வாய்ந்த மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில் பயற்சி பெற்ற ராணுவ வீரர்கள், நாட்டின் எல்லை பகுதிகளில் திறம்பட பணியாற்றுகின்றனர்.
கடந்த 2022ம் ஆண்டு, டிச., 24ல் முதல் அக்னி வீரர்களுக்கான குழு தேர்வு துவங்கியது. இங்கு பயிற்சி பெற்ற, 4,000 அக்னி வீரர்கள், எல்லை பகுதிகளில் பணியாற்றுகின்றனர். இவர்கள், ராணுவ பயிற்சி பெற்று வாழ்வாதாரத்திற்கு அஸ்திவாரம் அமைக்க அடித்தளம் அமைத்து கொடுத்த மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டருக்கு கடமைப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த, 6வது குழுவில் பயிற்சி பெற்று, சமீபத்தில் பாதுகாப்பு பணிக்கு சென்ற அக்னி வீரர்களின் வாழ்க்கை முறையை மாற்றிய ராணுவ மையத்துக்கு பலரும் 'ராயல் சல்யூட்' அடித்தனர்.
அதில் சில அக்னி வீரர்கள் கடந்து வந்த புதிய பாதை: படிப்புடன் விளையாட்டு அக்னிவீரர் அனுஜ் ஹிருதய் மின்ஜ், அந்தமான், நிக்கோபார் தீவு 'ஹட் பே' கிராமத்தை சேர்ந்தவர். வயல்களில் விளையாடி வளர்ந்த இவரை, ராணுவ மையத்தில் உள்ள ஓடுதளம், ஹாக்கி மைதானங்கள் சிறப்பாக வடிவமைத்தன. படிப்பு, விளையாட்டை சமநிலைப்படுத்த கடினமாக உழைத்து, சகிப்புத்தன்மை, அர்ப்பணிப்புடன், தேசபக்தி உணர்வால் உந்தப்பட்டு, ராணுவ பயிற்சி பெற்றார். விளையாட்டுடன், பயிற்சியை முடித்து, சீருடையை அணிந்து, பெருமையுடன் நேர்மையும் அர்த்தமுள்ள பாதையை உருவாக்க, பணியாற்ற சென்றுள்ளார்.
நம்பிக்கையால் வெற்றி 'ஏவி ரெக்ரூட்' சதீஷ், கர்நாடகா பெலகாவி மாவட்டம், தோரணகட்டி கிராமத்தை சேர்ந்தவர். சிறு வயதிலேயே உறவுகளை இழந்து, தாத்தா, பாட்டியால் வளர்க்கப்பட்டார். கஷ்டங்கள் நீடித்த போது. இவர்களுடன் வயலில் உழைத்து, 10ம் வகுப்பு வரை முடித்தார். அக்னிவீர் ஆட்சேர்ப்பை பயன்படுத்தியதால், ராணுவ கனவு பலித்தது. உடல் தகுதி தேர்வு, துப்பாக்கிச் சூடு, அணிவகுப்பில் சிறந்து, விடாமுயற்சியால் கல்விசார் சவால்களை கடந்தார். முதல் முயற்சியில் அனைத்திலும் தேர்ச்சி பெற்று, சுறுசுறுப்பான பயிற்சியாளராக விளங்கினார். குடும்பத்திற்கு மன உறுதி மற்றும் நம்பிக்கையின் நீடித்த சின்னமாக தேசி பாதுகாப்பில் உயர்ந்து நிற்கிறார்.
முயற்சியால் சிறப்பு 'ஏவி ரெக்ரூட்' ருத்ரேசன், ஆந்திர மாநிலம், திருப்பதி, நாராயணவனம் கிராமத்தை சேர்ந்தவர். நெசவாளர் தந்தை, தாயுடன் வசித்து வந்த இவருடன், 6 உடன்பிறப்புகள் இருந்தனர். பள்ளி பருவத்திலேய ராணுவத்தில் சேர ஈர்க்கப்பட்டு பிளஸ்-2 முடித்த பிறகு, கைப்பந்து போட்டிகள் மற்றும் உடற்பயிற்சி நடைமுறைகளுடன் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார், பி.பி.டி., தேர்வில் தோல்வியை சந்தித்த போது, மீண்டும் வலுவுடன், 2வது முயற்சியில் தேர்ச்சி பெற்றார், பயிற்சியில் சிறந்து விளங்கி, முழு பிரிவில் சிறந்தவராக உருவெடுத்தார். எளிமையான பின்னணியில் இருந்து வந்து, ஒழுக்கமான அக்னிவீரராக உருவெடுத்து, மீள்திறன் மற்றும் அசைக்க முடியாத உறுதியின் அடையாளமாக திகழ்கிறார்.
சவாலில் விடாமுயற்சி திருவண்ணாமலை மாவட்டம், ரங்கநாதபுரம் கிராமத்தில், சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த சுதர்சன், தினகூலி தொழிலாளர்களான தனது தாத்தா பாட்டியால் வளர்க்கப்பட்டார். மீள்திறனையும், கண்ணியத்தையும் ஊட்டி, 10ம் வகுப்பு வரை படிக்க வைத்தனர். குடும்பத்திற்காக, வயல்களில் வேலை செய்தார்.
அக்னிவீர் ஆட்சேர்ப்பு துவங்கியதும், வாய்ப்பை பயன்படுத்தி ராணுவ கனவை நனவாக்கினார்.உடற்தகுதி, துப்பாக்கி சுடுதல், கல்வி சார் சவால்களில் அனைத்திலும் விடா முயற்சியால் முதலில் வென்றார். சுறுசுறுப்பு பயிற்சியாளர், சிறந்த கபடி வீரராக வேறுபடுத்தி காட்டினார். குடும்பத்திற்கு மன உறுதி, விடாமுயற்சி மற்றும் நம்பிக்கையின் நீடித்த அடையாளமாக உயர்ந்து நிற்கிறார்.

