/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கிறிஸ்துமஸ் திருப்பலி: கொட்டும் பனியில் பங்கேற்ற மக்கள்
/
கிறிஸ்துமஸ் திருப்பலி: கொட்டும் பனியில் பங்கேற்ற மக்கள்
கிறிஸ்துமஸ் திருப்பலி: கொட்டும் பனியில் பங்கேற்ற மக்கள்
கிறிஸ்துமஸ் திருப்பலி: கொட்டும் பனியில் பங்கேற்ற மக்கள்
ADDED : டிச 26, 2025 06:51 AM

நமது நிருபர் குழு--: நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், கொட்டும் பனியிலும் நள்ளிரவில் நடந்த திருப்பலிகளில் பங்கு மக்கள் பங்கேற்றனர்.
நீலகிரியின் முதல் கத்தோலிக்க ஆலயமான செயின்ட் மேரீஸ் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு இரவு திருப்பலி நடந்தது. நேற்று முன்தினம் இரவு, 11:00 மணி முதல், கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடப்பட்டு, 12:00 மணிக்கு குழந்தை ஏசுவின் சுரூபத்தை மறைமாவட்ட முதன்மை குரு கிறிஸ்டோபர் லாரன்ஸ் எடுத்து வந்து திருப்பலி பீடத்தில் வைத்தார். பங்கு பேரவை செயலர் மார்ட்டின் கிறிஸ்துமஸ் அமைதி வெள்ளை கேண்டிலை ஏற்றிவைத்தார்.
பின், குளோரியா பாடல் பாட குழந்தை ஏசுவை பவனியாக எடுத்து வந்து மாட்டு குடிலில் கிடத்தி குருக்கள் ஆராதனை செலுத்தி ஆடம்பர திருப்பலி நடந்தது. பங்கு குருக்கள் பெனட்டிக்ட் மற்றும் டினோ பிராங்க் அனைவருக்கும் சிறப்பு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதேபோல, ஊட்டியில் உள்ள நுாற்றாண்டு பழமை வாய்ந்த இருதய ஆண்டவர் பேராலயத்தில், மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில், இரவு நேர திருப்பலி நிறைவேற்றப்பட்டது. அதில், ஊட்டி சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பங்கு மக்கள் திரளாக பங்கேற்றனர்.
குன்னுாரில் பல்வேறு தேவாலயங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு கொட்டும் பனியில் நடந்த திருப்பலிகளில் பங்கு மக்கள் திரளாக பங்கேற்றனர். பாய்ஸ் கம்பெனி வேளாங்கண்ணி ஆலயத்தில், நேற்று முன்தினம் நள்ளிரவு, 11:00 மணியளவில் பூபாள குழுவினரின் பாடல்கள் இடம்பெற்றது. தொடர்ந்து நள்ளிரவு, 12:00 மணி; நேற்று காலை, 7:00 மணி, 9:00 மணி, 11:00 மணிக்கு சிறப்பு திருப்பலிகள் நடந்தன.
பங்குத்தந்தை அருட்சகோதரர் ஆரோக்கியராஜ், உதவி பங்குத்தந்தை கிளமெண்ட் ஆன்டனி, பெங்களூரு சபை அருட்தந்தை ஆல்வின ரெக்ஸ் சிறப்பு திருப்பலிகளை நடத்தினர்.
ஏற்பாடுகளை பங்கு அருட்சகோதரிகள், பங்கு பேரவையினர், அன்பியத்தார், பக்த சபையினர் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர். கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். இதேபோல, குன்னுார் புனித அந்தோணியார் தேவாலயம் உட்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது.

