/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூவமூலாவில் சிறுத்தை உலா அச்சத்தில் பொதுமக்கள்
/
கூவமூலாவில் சிறுத்தை உலா அச்சத்தில் பொதுமக்கள்
ADDED : டிச 26, 2025 06:51 AM
பந்தலுார்: பந்தலுார் அருகே கூவமூலா கிராமத்தில் நாள்தோறும் உலாவரும் சிறுத்தையால் மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.
பந்தலுார் அருகே கூவமூலா கிராமம் அமைந்துள்ளது. இங்கு, 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் விவசாய தோட்டங்கள், அரசு துவக்கப்பள்ளி, கோவில் மற்றும் பள்ளிவாசல், மதரஸா ஆகியவை அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த ஆட்டை பகல் நேரத்தில் சிறுத்தை கடித்து கொன்றது. தொடர்ந்து வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆனால், மீண்டும் மக்கள் குடியிருக்கும் பகுதிகள் மற்றும் சாலையில் தினசரி, சிறுத்தை உலா வருவதை வழக்கமாக கொண்டுள்ளது. இந்தப்பகுதி மாணவர்கள் மற்றும் மதரஸா செல்லும் குழந்தைகள், தனியாக நடந்து செல்லும் நிலையில், சிறுத்தையால் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
இங்கு பழங்குடியின கிராமமும் உள்ளதால், பழங்குடியின குழந்தைகள் வெளியில் விளையாடுவது மற்றும் அருகில் உள்ள புதர் பகுதிகளுக்கு செல்வது போன்ற செயல்களில் ஈடுபடும் நிலையில், சிறுத்தையால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, வனத்துறையினர் கண்காணித்து, குடியிருப்பு பகுதியில் உலாவரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து, அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும்.

