/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ரூ. 15.36 லட்சம் மதிப்பில் 318 மாணவர்களுக்கு சைக்கிள்
/
ரூ. 15.36 லட்சம் மதிப்பில் 318 மாணவர்களுக்கு சைக்கிள்
ரூ. 15.36 லட்சம் மதிப்பில் 318 மாணவர்களுக்கு சைக்கிள்
ரூ. 15.36 லட்சம் மதிப்பில் 318 மாணவர்களுக்கு சைக்கிள்
ADDED : ஜன 02, 2024 10:39 PM
ஊட்டி;ஊட்டி பெத்லகேம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் புனித சூசையப்பர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கல்வித்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.
ஊட்டி கலெக்டர் அருணா முன்னிலை வகித்தார். சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 15.36, லட்சம் ரூபாய் மதிப்பில், 318 மாணவ, மாணவியருக்கு, இலவச சைக்கிள் வழங்கி பேசியதாவது:
மாநில முதல்வர் பள்ளி கல்வித்துறைக்காக, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக மாணவர்களுக்கு, விலையில்லா பாட புத்தகம், இலவச பஸ் பாஸ், இலவச சைக்கிள் போன்ற திட்டங்களை பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக செயல்படுத்தி வருகிறார்.
அதன்படி, நீலகிரியில், '1,774 மாணவர்களுக்கு தலா, 4,900 ரூபாய், 2,313 மாணவியருக்கு, தலா 4,760 ரூபாய்,' என, மொத்தம், 4087 மாணவ மாணவியருக்கு, 1.97 கோடி ரூபாய் மதிப்பில் இலவச சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு விரைவில் இலவச சைக்கிள் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
அதில், டி.ஆர்.ஓ., மகராஜன், முதன்மை கல்வி அலுவலர் கீதா மற்றும் ஊட்டி நகர மன்ற தலைவர் வாணீஸ்வரி அரசு அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக பங்கேற்றனர்.