/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
எதிர்காலம் வளமாக போதை பழக்கத்தை ஒழிக்கணும்: விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆர்.டி.ஓ., அறிவுரை

ADDED : அக் 26, 2025 08:53 PM

பந்தலூர்: போதை பழக்கங்களில் இருந்து, பழங்குடியின மக்கள் மீண்டால் மட்டுமே எதிர்காலம் வளமாகும் என, அறிவுரை வழங்கப்பட்டது.
பந்தலூர் அருகே பென்னை பழங்குடியினர் கிராமத்தில், வருவாய் துறை சார்பில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கூடலுார் ஆர். டி .ஓ. குணசேகரன் தலைமை வகித்து பேசுகையில், ''பந்தலூர் மற்றும் கூடலூர் பகுதியில் வாழும் பழங்குடியின மக்கள் மத்தியில் மட்டுமே, போதைப் பழக்கம் அதிகரித்து வருகிறது.
கடைகளுக்கு சென்று மது வாங்குவதை விட, கூடுதல் விலைக்கு கிராமங்களுக்கு நேரடியாக மதுவை வரவழைத்து அருந்துவது இந்த கிராமத்தில் அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது. கிராமத்திற்கு மதுபானங்கள் வாங்கி வரும், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
பழங்குடியின மக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கு, போதைப்பழக்கம் முக்கிய காரணமாகவும். போதையால் பழங்குடியின மக்களின் உடல் திறன் பாதிக்கப்பட்டு, பல்வேறு நோய்களுக்கு உட்பட்டு சிறு வயதிலேயே உயிரிழப்பது, சிறு வயது பழங்குடியின பெண்கள் திருமணம் செய்து கொள்வது போன்றவைகளால் பழங்குடியின சமுதாயமே அழிவின் பிடியில் சிக்கி உள்ளது.
இந்த நிலை மாறினால் மட்டுமே மண்ணின் மைந்தர்கள் காப்பாற்றப்படுவீர்கள்.'' என்றார்.
தாசில்தார் சிராஜுநிஷா, மதுவிலக்கு பிரிவு தாசில்தார் சித்தராஜ், தலைமையிட துணை தாசில்தார் பொன்னரசு, ஆல்கஹாலில் அனானிமஸ் நிர்வாகி ஜார்ஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.