/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சுற்றுலா விசாவில் வந்து சூட்டிங் நடத்திய ரஷ்யர்கள்: ஓட்டல் நிர்வாகத்திற்கு போலீசார் எச்சரிக்கை
/
சுற்றுலா விசாவில் வந்து சூட்டிங் நடத்திய ரஷ்யர்கள்: ஓட்டல் நிர்வாகத்திற்கு போலீசார் எச்சரிக்கை
சுற்றுலா விசாவில் வந்து சூட்டிங் நடத்திய ரஷ்யர்கள்: ஓட்டல் நிர்வாகத்திற்கு போலீசார் எச்சரிக்கை
சுற்றுலா விசாவில் வந்து சூட்டிங் நடத்திய ரஷ்யர்கள்: ஓட்டல் நிர்வாகத்திற்கு போலீசார் எச்சரிக்கை
UPDATED : ஆக 17, 2024 06:04 PM
ADDED : ஆக 17, 2024 05:58 PM

ஊட்டி: ஊட்டியில் நடிகர் சூர்யா படபிடிப்புக்காக சுற்றுலா விசாவில் வந்து, ஓட்டலில் தங்கிய ரஷ்ய நாட்டினர் குறித்து தகவல் தெரிவிக்காத ஓட்டல் நிர்வாகத்தினரை போலீசார் எச்சரித்தனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள 'நவாநகர் பேலஸ்' என்ற இடத்தில் நடிகர் சூர்யா நடித்த தமிழ் படம் ஒன்றின் சண்டைக்காட்சிகள் படம் ஆக்கப்பட்டு வந்தது. இந்த படப்பிடிப்பிற்காக ரஷ்யாவை சேர்ந்த 155 பேர் கடந்த, 27 ம் தேதி சுற்றுலா விசா பெற்று வந்துள்ளனர். ஊட்டியில் உள்ள, சில தனியார் ஓட்டல்களில் தங்கி படப்பிடிப்பிற்கு சென்று வந்தனர்.
வெளிநாட்டை சேர்ந்தவர்கள் ஊட்டியில் வந்து தங்கினால் தங்கும் விடுதி நிர்வாகத்தினர் இதுகுறித்து சம்மந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன் மற்றும் எஸ்.பி., அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால், ரஷ்ய நாட்டினர் குறித்த விபரங்களை ஓட்டல் நிர்வாகத்தினர் தெரிவிக்காமல் இருந்து வந்துள்ளனர்.
ரஷ்யா நாட்டினர் தங்கி இருந்தது குறித்து போலீசாருக்கு தெரியவந்ததை அடுத்து, எஸ்.பி., நிஷா உத்தரவின் பேரில், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுஜாதா, போலீசாரை அனுப்பி ஆய்வு மேற்கொண்டார்.
போலீசார் கூறுகையில், 'ஊட்டி ஹில்பங்க் பகுதியில் உள்ள ஓட்டல் வெல்பேக் ரெசிடென்சி, ரயில் நிலையம் அருகே உள்ள ஓட்டல் சபையர் மற்றும் சபையர் கார்டன் வியூ ஆகிய ஓட்டல்களில் தங்கிய, 155 பேரில், 42 பேர் கடந்த வாரம் ரஷ்ய திரும்பிய நிலையில், 113 பேர் அங்கு தங்கி இருந்தது விசாரணையில் தெரியவந்தது.
பின், விளக்கம் கேட்டு, நோட்டீஸ் வழங்கி எச்சரித்தோம். அங்கு தங்கி இருந்த ரஷ்ய நாட்டினர் அனைவரையும் வெளியேற்றினோம். இனி, வரும் நாட்களில் வெளி நாட்டினர் ஊட்டியில் தங்குவது குறித்து ஓட்டல் நிர்வாகத்தினர் சம்மந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவிக்காமல் இருப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.' என்றனர்