ADDED : அக் 01, 2026 08:35 AM
அ நிறம் | அளவு
கூடலுார்: கூடலுாரில் பணி ஓய்வு பெற்ற போக்குவரத்து எஸ்.ஐ.,க்கு பாராட்டு விழா நடந்தது.
தமிழக போலீசில், 33 ஆண்டுகள் பணியாற்றி, கூடலுார் போக்குவரத்து எஸ்.ஐ.,யாக பணியாற்றி வந்த பிலிப்சார்ஸல் நேற்று பணி ஓய்வு பெற்றார். அவருக்கு பாராட்டு விழா, கூடலுார் போலீஸ் ஸ்டேஷனில் நடந்தது.
கூடலுார் டி.எஸ்.பி., கோபாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் பவுலோஸ், மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா, எஸ்.ஐ.,கள் கவியரசு, சர்புதீன் மற்றும் போலீசார், அவரின் சிறந்த பணிக்கு பாராட்டு தெரிவித்து பரிசுகளை வழங்கினர்.
