/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சர்தார் வல்லபாய் பட்டேல் 150-வது பிறந்ததின பேரணி
/
சர்தார் வல்லபாய் பட்டேல் 150-வது பிறந்ததின பேரணி
சர்தார் வல்லபாய் பட்டேல் 150-வது பிறந்ததின பேரணி
சர்தார் வல்லபாய் பட்டேல் 150-வது பிறந்ததின பேரணி
ADDED : நவ 21, 2025 06:05 AM

ஊட்டி: சர்தார் வல்லபாய் பட்டேலின், 150-வது பிறந்த தின விழாவை முன்னிட்டு தேசிய ஒற்றுமை தின பேரணி நடந்தது.
'இந்தியாவின் இரும்பு மனிதர்' என்று போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேலின், 150வது பிறந்தநாளை முன்னிட்டு, மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் தேசிய ஒற்றுமை தினப் பேரணி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையின் கீழ் இயங்கும் நேரு யுவ பாரத் துறையினர், ஊட்டியில் ஒற்றுமை தின பேரணியை நடத்தினர்.
இந்த ஒற்றுமை தின பேரணியில், 300 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் தேசிய கொடி மற்றும் ஒற்றுமை குறித்த பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட திறந்தவெளி அரங்கத்தில் தொடங்கிய, பேரணியை மாவட்ட விளையாட்டு அலுவலர் இந்திரா தொடங்கி வைத்தார்.
பேரணி, சேரிங்கிராஸ், கோத்தகிரி சாலை, மதுவானா சந்திப்பு, தாவரவியல் பூங்கா நுழைவாயில் வழியாக மீண்டும் மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட திறந்தவெளி அரங்கத்தில் நிறைவடைந்தது.
மேரா யுவ பாரத் மாவட்ட அலுவலர் கோபால் கூறியதாவது, ''நாட்டின் எதிர்காலமான இளைஞர்கள் மனதில், தேச ஒற்றுமை மற்றும் வளர்ச்சியை ஊக்குவிப்பதன் நோக்கத்தில் இந்த பேரணி நடத்தப்பட்டது. இதில், மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர், '' என்றார்.

