/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
உள்ளாட்சி மறுசீரமைப்பு அறிவிப்பில் சிக்கிய கிராமங்களை காப்பாற்றுங்கள்! சிறு விவசாயிகளுக்கு வரிசுமை அதிகரிக்கும் அபாயம்
/
உள்ளாட்சி மறுசீரமைப்பு அறிவிப்பில் சிக்கிய கிராமங்களை காப்பாற்றுங்கள்! சிறு விவசாயிகளுக்கு வரிசுமை அதிகரிக்கும் அபாயம்
உள்ளாட்சி மறுசீரமைப்பு அறிவிப்பில் சிக்கிய கிராமங்களை காப்பாற்றுங்கள்! சிறு விவசாயிகளுக்கு வரிசுமை அதிகரிக்கும் அபாயம்
உள்ளாட்சி மறுசீரமைப்பு அறிவிப்பில் சிக்கிய கிராமங்களை காப்பாற்றுங்கள்! சிறு விவசாயிகளுக்கு வரிசுமை அதிகரிக்கும் அபாயம்
ADDED : அக் 17, 2024 10:00 PM
குன்னுார் : 'நீலகிரி உள்ளாட்சி மறுசீரமைப்பு அறிவிப்பில் சிக்கிய கிராமங்களை காப்பாற்ற வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மிக சிறிய மாவட்டமான நீலகிரியில், பழங்குடியினர், தோட்ட தொழிலாளர்கள், சிறு, குறு தேயிலை விசாயிகள், காய்கறி விவசாயிகள் அதிகம் உள்ளனர். இங்கு தேயிலை தொழிற்சாலைகள் தவிர, வேறு சிறு, குறு தொழில்கள் எதுவும் இல்லை.
தேயிலை எஸ்டேட்களிலிருந்து கிடைக்கும் வரி வருவாயை கணக்கில் எடுத்து, ஏற்கனவே ஊராட்சிகள், பேரூராட்சிகளாக நிலை உயர்த்தப்பட்டதால், வீட்டு வரி, சொத்துவரி உட்பட அனைத்து வரிகளும் உயர்த்தப்பட்டுள்ளன.
அந்த வரியை அந்த தேயிலை தோட்டத்தில் வேலை செய்யும் கூலி தொழிலாளிகள் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
மக்களின் வாழ்க்கை தரம் உயரவில்லை
பழங்குடியினர், தோட்ட தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில், பெரும்பாலான கிராமங்கள் பேரூராட்சியில் உள்ளதால், மத்திய அரசின் ஜல்ஜீவன், ஜல்சக்தி, தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் உள்ளிட்ட அரசு திட்டங்களின் பயன் இப்பகுதி மக்களுக்கு கிடைப்பதில்லை. பழங்குடியினருக்கு எந்த திட்டங்களும் மானியங்களும் இல்லாததுடன் ஜனநாயகத்தில் பங்கு பெறும் வாய்ப்பும் குறைவாக உள்ளது. இந்த கிராமங்கள் பேரூராட்சிகளாக மாற்றப்பட்டு பல ஆண்டுகளான பிறகும் மக்களின் வாழ்க்கை தரம் உயரவில்லை.
அதுபோல, 35 கிராம ஊராட்சிகளும் பெரிய பரப்பளவு கொண்டவையாக இருக்கின்றன. இதனால், ஊராட்சி செயலாளர்களால் பணியாற்ற இயலாத நிலை ஏற்பட்டுள்ளது என்பது, ஏற்கனவே மாவட்ட நிர்வாக அதிகாரிகள் ஆய்வு தெளிவானது.
மாநகராட்சியாக மாற்ற திட்டம்
இந்நிலையில், 4 உள்ளாட்சிகளை இணைத்து, ஊட்டியை மாநகராட்சியாக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. பல கிராமங்களிலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. கிராம சபைகளிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனினும், பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகள் இணைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
லஞ்சம் இல்லாத நீலகிரி அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மனோகரன் கூறுகையில், ''அதிகார பரவல் தேவை என்ற கொள்கை கொண்ட மாநில அரசு, சிறிய மலை கிராமங்களில் உள்ள கிராம பஞ்சாயத்துகளின் அதிகாரங்களை பறித்து, அவற்றை மாநகராட்சி போன்ற அமைப்புகளிடம் கொடுக்க திட்டமிடுவது முரணாக உள்ளது. ஊட்டியை மாநகராட்சியாக நிலை உயர்த்துவதற்கு நகர மன்றத்தில் அவசரமாக தீர்மானம் நிறைவேற்றியதால் கிராமங்களுக்கு எந்த பயனும் கிடைக்க போவதில்லை.
மாநகராட்சியில் கிராமங்களை இணைக்கும் அநீதியால் ஏழை எளிய மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகுவர்.
இந்த மாவட்டம் முழுவதும் ஊராட்சிகளாகவும், சிற்றுாராட்சிகளாகவும், 3 நகராட்சிகள் கொண்டதாகவும் மட்டுமே இருக்க வேண்டும். இது குறித்து, மாநில முதல்வர் தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.