/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தொடர் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு உதவித்தொகை
/
தொடர் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு உதவித்தொகை
ADDED : பிப் 17, 2025 10:30 PM
பந்தலுார்; பந்தலுார் யானை தாக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.
பந்தலுாரில் செயல்பட்டு வரும் தனியார் ஜூவல்லரி சார்பில், கிட்னி மற்றும் புற்றுநோய் பாதித்து தொடர் சிகிச்சை பெற்று வருபவர்கள்; யானை தாக்கி பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த, 50 பேருக்கு உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஜூவல்லரி பொது மேலாளர் முத்துக்குமார் வரவேற்றார். உரிமையாளர்கள் ஷாஜன்ஜார்ஜ், பினோய் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், 50 பேருக்கு 2.5 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது. பந்தலுார் வியாபாரிகள் சங்க தலைவர் அஸ்ரப், நகராட்சி தலைவி சிவகாமி உட்பட பலர் பங்கேற்றனர்