/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பள்ளி மேலாண்மை குழு செயலி பயிற்சி கூட்டம்
/
பள்ளி மேலாண்மை குழு செயலி பயிற்சி கூட்டம்
ADDED : ஜூலை 04, 2025 09:28 PM
கோத்தகிரி; கோத்தகிரி ஒரசோலை அரசு நடுநிலைப் பள்ளியில், மேலாண்மை குழு செயலிபயிற்சி கூட்டம் நடந்தது. மேலாண்மை குழு தலைவர் நிஷாந்தி தலைமை வகித்தார்.
மாவட்ட மேலாண்மை குழு கருத்தாளர் ராஜேஷ்வரி, உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்ததுடன், மேலாண்மை குழு பணிகள் மற்றும் கடமைகள் குறித்து விளக்கம் அளித்தார். மேலும், மாணவர் சேர்க்கை, கட்டமைப்பு, குடிநீர், கழிவறை, சுற்றுப்புற சூழல், மாணவர் கற்றல் அடைவுகள் மற்றும் நிதி பயன்பாடு குறித்து விளக்கம் அளித்தார்.
மருத்துவர் பானுபிரியா, சுகாதார கல்வியின் அவசியம் குறித்து பேசினார். 'பள்ளி முன்னேற்றத்திற்காக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவது,' என, முடிவெடுக்கப்பட்டது.
அதில், மேலாண்மை குழு நிர்வாகிகள், கவுன்சிலர் தேவகி, முன்னாள் மாணவர்கள் ஆண்டி, ராஜகோபால் உட்பட, ஆசிரியர்கள் பங்கேற்றனர். மேலாண்மை குழு துணை தலைவர் வேளாகண்ணி வரவேற்றார். ஆசிரியை கமலா நன்றி கூறினார்.